நவரசா - ஒரு துன்பியல் சம்பவம் - பாகம் 1

ரௌத்திரம் என்ற ஒரு படம் - காட்சி கீழே 


அந்த பையனின் வீட்டில் மின்சாரம் போய் விடுகிறது. 


தமிழகத்தில் , ஏன் இந்தியாவில் உள்ள அனைவரும் அடுத்து செய்வது , பக்கத்து வீட்டில் மின்சாரம் இருக்கிறதா என்று பார்ப்பதாக தான் இருக்கும். இது ஒரு கிளிஷே.


அந்த பையனும்  , பக்கத்து வீட்டை பார்க்கின்றான் . விளக்கு எரிகிறது, வாசலில் நியான் ஒளியில் அந்த பெண் நிற்கிறாள் , இருந்தாலும் கேட்கிறான், "மின்சாரம் உள்ளதா" என்று.  இத்தனைக்கும் ரோட்டின் விளக்கு வெளிச்சம் வீடு வரை வருகிறது .. 


என்னத்த சொல்ல ...



ஆங்கிலத்தில் படங்களை பற்றி "technically brilliant "என்ற ஒரு வார்த்தை பிரவாகம் உண்டு., தமிழில் சொல்ல வேண்டுமானால், படம் பார்பதற்கு பளிச்சென்று இருக்கிறது, அல்லது, படத்தில் கதை / திரைக்கதையை தவிர அத்தனை அம்சங்களும் நன்றாக உள்ளன என்றும்  பொருள் கொள்ளலாம். இன்னும்  சற்று விளக்கி சொன்னால், படம் சூற மொக்கை ஆனாலும்  பளிச்சென்று  இருந்தது என்றும் கொள்ளலாம். இதற்கு அதி த்ராபையான ஒரு உதாரணம்  - காற்று வெளியிடை . 


 இப்படி , படம்  எப்படி   இருந்தாலும் கண்ணில் ஒத்திக்கொள்ளும்படி தமிழில் படம் எடுப்பவர்கள், மணிரத்தினம் - மணி சார் , கவுதம் மேனன், ராஜிவ் மேனன் ஆகியோரை சொல்லலாம். நிற்க, இவர்கள் மூவருமே தமிழுக்கு அதி முக்கியமான படங்களும் தந்துள்ளார்கள், மறுக்கவே இல்லை. அதை மிஞ்சிய மொக்கை படங்களையும் தந்துள்ளார்கள் .. உதாரணம் - ராவணா படத்தில் வரும் விக்ரம் -"டன் டன் டனக்கா " என்று ஒரு வழி பண்ணி விடுவார்கள் .


 ஆக இப்படி பல வெற்றிப்படங்களை கொடுத்த  இந்த "அப்பர் மிடில் கிளாஸ் " இயக்குனர்கள் இயக்கிய படங்களை பார்க்க வேண்டும் என்று  இயற்கையாகவே ஒரு ஈர்ப்பு வரும் , அந்த ஈர்ப்பு எனக்கும் வந்தது , நான்  செய்த வினை என்றே கருதுகின்றேன்


முதல் படம்ஹாஷ்யா- summer of 92


நமக்கு எப்பவுமே ஹாஸ்யம் பிடிக்கும் என்பதால்  இந்த படத்தை பார்க்க ஆரம்பித்தேன் . 


முதல் வெறுப்பு , அந்த படத்தில் YG  மகேந்திரனை பார்த்ததும் வந்ததுதேவை இல்லாத கதாபாத்திரம்சுத்தமாக ஒட்டவில்லை.


அடுத்து , ஒரு காட்சியில் கூட சிரிப்பே வரவில்லை . 


இந்தப் படத்தில் என்ன சொல வருகிறார்கள்  என்பதை கடைசி வரை புரிந்துகொள்ளவே முடியவில்லைசிறுவர்கள்  குசு என்ற வார்த்தையை கேட்டதும் "கெக்க பிக்கஎன்று பல் இளிப்பர்கள் . 

நம்மையும் அப்படியே நினைத்தே இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்


சிரிப்பு வராமல் எரிச்சல் மட்டுமே மிஞ்சியது . பிரியதர்ஷன் தனக்கு வசதியான மேட்டுக்குடி படங்களை மட்டுமே எடுப்பது  அவருக்கும் நல்லது நமக்கும் நல்லது.



அடுத்த படம் - பாயசம் 


படத்தை பொறுத்தவரை குறை சொல்ல முடியாது , காரணம் இது பிரசித்தி பெற்ற பாயாசம் என்ற  ஜானகிராமன்அவர்களின் கதையை படமாக எடுத்து இருக்கிறார்கள்.ஆனால் நமக்கு இதன் இயக்குனரான வசந்த் அவர்களின் மீது ஒரு தீராத வெறுப்பு என்றுமே இருந்துள்ளதுகாரணம் ஒரு பழையகதை . அதாவது அண்ணாமலை படத்திற்கு வசந்த் தான் இயக்குனராக நியமிக்கப்பட்டதாகவும் , ரஜினியை விட தான் தான் பெரிய ஆள் என்பதுபோல ஒரு சமாச்சாரம் அந்த படப்பிடிப்பில் நடந்ததாகவும்  ,பிறகே  அவருக்கு கல்தா கொடுகப்பட்டே சுரேஷ் கிருஷ்ணா உள்ளே வந்ததாக அந்த கதை முடியும் . ரஜினியை விட  பெரிய ஆளா இவர் என்று அவரை பிடிக்காமல் போனது . இதனால் இந்த படத்தை விட்டு விடுவோம் . 


அடுத்து முதலில் கூறிய ரவுத்ரா என்ற ஒரு காவியம் 


முதல் காட்சி - எனக்கு வியாபாரம் நடக்கவில்லை என்று கூறும் ஒரு மளிகைகடைக்காரர் சொல்லும் பொழுது பின்னால் ஒரு சிறுவன் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறான் . நம்மை கடைந்தெடுத்த மடையர்கள்  என்று முடிவு செய்து விட்டார்கள் என்பது அதிலேயே தெரிந்தது . 


தேவையே இல்லாமல் இரண்டு வசனத்திற்கு , சற்றும் பொருந்தாத  ஒரு கெட்ட வார்த்தை . முதலில் கெட்ட வார்த்தையை யோசித்து விட்டு வசனம் எழுதி இருப்பார்கள் போல ..


அடுத்த ஒரு காட்சியில் , அந்த இளைஞனின் தங்கை ஒரு ஸ்கூல் பேக்கை நோண்டிக்கொண்டே இருக்க , இவன் ஏதோ பேச , "சும்மா இருடா என்னால் படிக்க முடியவில்லை " என்று காமெடி விடுகிறாள்.


அடுத்து ஃபுட்பால் என்கிற பெயரில் ஓர் காமெடி . 


அடுத்து இது தான் , என்று கணிக்கும் அளவிற்கு கிலிஷே. ஒரே ஆறுதல் அந்த பையனின் நடிப்பு . 


 கடைசிக் ஐந்து நிமிடங்கள்,  அபத்தத்தின் உச்சம்.


இதற்கு மேலும் , இதயம் அனுமதித்து மற்ற முத்துக்களை பார்த்தால் பாகம் 2 வரும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.