IAS

 एवं यः सर्वभूतेषु पश्यत्यात्मानमात्मना । स सर्वसमतामेत्य ब्रह्माभ्येति परं पदम् ॥

He who thus recognizes in his individual soul (Self, Atman), the universal soul that exists in all beings,
becomes equal-minded towards all, and enters the highest state, Brahman.

— Manusmriti 12.125, Calcutta manuscript with Kulluka Bhatta commentary[32][33]


கண்ணப்பனுக்கு நீண்ட காலமாக ஒரு ஆசைஎப்படியாவது ஒரு ஐயரை பிடித்து அவனது தந்தைக்கு ஒரு திதி கொடுக்க வேண்டும் என்பது தான்அவனது அப்பாவிற்கு ராம  தீட்சதர் என்று ஒருவர் அமைந்தார் . ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் வெறும் வாழைக்காயை வாங்கிக்கொண்டு அவர் தர்ப்பணம் செய்து வைப்பார் . ராம  தீட்சதர் தீட்டு பார்ப்பவர் என்றாலும் , தர்பணத்தின் பொழுது அப்பாவின் கையை பிடித்தே சன்மானத்தை வாங்குவார்கண்ணப்பனுக்கு பத்து வயது இருக்கும் பொழுது நீங்கள் என்னை தொட்டால் தீட்டா என்று கேட்டே விட்டான் . அந்த கேள்வியினால் ஐயர் திகைக்க , கண்ணப்பனின் அப்பாவோ ரெண்டு சாத்து  சாத்தினார் . 


அடுத்து வந்த முப்பது வருடங்களில் அவனுக்கு இதே கேள்விக்கு பல்வேறு விடைகள் கிடைத்தன . 


முதல் விடை


கண்ணப்பனிற்கு பதினேழு வயதுஜாதி சான்றிதழில் வண்ணான் என்று போட்டு   SC என்றும் சான்றளிதார் அந்த தாசில்தார் . 


இரண்டாம் விடை


கண்ணபணுக்கு 24 வயது இந்த முறை எதற்கோ ஒரு சான்றிதழ் தேவை படதாசில்தாரிடம் செல்ல நேர்ந்தது . அப்பொழுது   இராம ஐய்யர் ஓரமாக நின்று யாரிடமோ கெஞ்சிகொண்டிருந்தார் ஐந்து நிமிடம் கவனித்ததில் அவருக்கு அரசு வழங்கும் மாத கருணை தொகையை பெற ஒரு சான்றிதழ் தேவை என்பதனை அறிந்தான் .  புதிதாக வந்திருக்கும் தாசில்தார் ஒரு வகையான ஊழல் பேர்வழி . காசு இல்லாமல் காலில் கடிக்கும் கொசுவை கூட கொல்ல மாட்டான்இவனுக்கு ஐய்யரை பார்த்து பிரிதாபம் ஏற்படஉள்ளேசென்று அவன் பேசி ஒரே நிமிடத்தில் வாங்கி கொடுத்தான்ஐயர் அந்த சான்றிதலை வாங்கி இவன் கை தொட்டே நன்றி சொன்னார்


பல ஆண்டு ஆனாலும் , அதே தீட்டு கேள்வியை அவன் மறுபடியும் கேட்கஐயர்ஆரம்பித்தார்அதாவதுடா அம்பிஅந்த காலத்துல என்று ஆரம்பித்து அவர் கூறியதின் சாராம்சம் இது தான்அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்புமக்களின் தொழிற்கு ஏற்ப அவர் நான்கு வர்ணங்களில் பிரிக்கபட்டதாகவும் , யார் வேண்டுமானாலும் ஐய்யராகவோ , சத்திரியனாகவும் மாறலாம் ஆனால் பின்னொரு நன்னாளில் , இது பிறப்பை ஒட்டி மாறியதாகவும் , அப்பொழுதிலிருந்து இந்த தீட்டு கலாச்சாரம் ஆரம்பித்து என்று முடித்தார் .


கண்ணபனுக்கு , ஐயர் சொல்வதில் எந்தளவு உண்மை என்ற அடுத்த கேள்வி எழுந்தது . கிளம்பும் முன் அய்யரிடம் , அவரது மகன் தற்பொழுது மார்கெட்டிங் துறையில் இருக்கிறானே அவன் ஐய்யரா இல்லை வர்ணத்தின் படி சூத்திரனா என்று கேட்க , ஐயர் திகைத்தாலும் , சிரித்துகொண்டே முறைத்தார் .


மூன்றாம் விடை.


 யே எஸ் தேர்வுக்கு மூன்றாம் முறையாக எழுத தயார் செய்யும் பொழுது அவனுக்கு திராவிடத்தின் அறிமுகம் ஏற்பட்டதுதிராவிடம் சார்ந்த நூல்கள் எல்லாமே சாதிய வன்மம்  எல்லாமே ஏதோ ஆரியர்களின் செயல் , இந்து சமவெளியில் இருந்து  புறப்பட்டு வந்து நம்மை வென்று நம்மை அடிமையாக்கி விட்டனர் என்பது போலவே எழுதி வைத்திருந்தனர்அதைப் படித்தவுடன் கண்ணப்பனுக்கு இன்னும் நிறைய கேள்விகள் எழுந்தன. உதாரணத்திற்கு எங்கிருந்தோ வரும் ஒருவனை நாம் ஏன் ஏற்றுக்கொண்டு  அடிமையாகவேண்டும்அதை விட எங்கிருந்தோ வரும் ஒருவன் தனக்கு மேல் என்று சொல்லும்போது இங்கே இருந்த கோடிக்கணக்கான மக்களுக்கு அது எப்படி சரியாக பட்டது


ஒருவேளை அவர்கள் வெள்ளையாக இருந்து நாம் அனைவருமே கருப்பாக இருந்து வெள்ளை கருப்பிற்கு மேல் என்று ஒரு கருத்தாக்கம் பரப்பப்பட்டதா என்று தெரியவில்லைஅதேபோல் பார்ப்பனர்கள் வெள்ளைத் தோலுடன் வந்து ராஜாக்களின் மிக முக்கிய இடங்களில் பொறுமையாக படியேறி மன்னர்களிடம் இந்த வர்ணங்களைஅறிமுகப்படுத்தினார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் இருப்பதாக தெரியவில்லைஅன்றைய  காலத்திலும் பறையடிக்கும் பறையர்கள் இருந்தார்கள் துணிதுவைக்கும் வண்ணான்  இருந்தார்கள் என்பது மட்டும் உண்மைஅத்தனை பிரச்சனைகளுக்கும் பார்ப்பனர் தான் காரணம் என்றால் அவர்களுக்கு கீழ் இருக்கும் ஜாதிகளிலும் ஏன் மக்கள் இன்னும் சாதி வெறியுடன் தெரிகிறார்கள்தனக்கு மேலே ஒருவன் ஏற்கனவே  மேல்சாதி என்கிறான் அப்படி இருக்கும்போது தனக்கு கீழ் இருக்கும் ஒரு சாதியை இவர்களுக்கு எப்படி கீழ்சாதி என்று கூப்பிட தோன்றுகிறது


நான்கு வர்ணங்களைப் பற்றி இராம ஐய்யர்கூறியது ஞாபகத்திற்கு வந்தது . இந்த நான்கு வர்ணங்களிலும்  ஒரு கும்பலை சேர்க்காமல் தலித்துகள் என்று பெயரிடப்பட்டு அவர்கள் தீண்டத்தகாதவர்களாக வைக்கப்பட்டிருந்தனர்இந்த தலித் என்னும் வார்த்தையும் அதைத்தான் அந்த மக்களின்குறியீடும் என்று ஆரம்பித்தது 2000 வருடங்களாகவா யில்லை 200 வருடங்களாக , இல்லைஆயிரம் வருடங்களா? இதற்கு பதில் இல்லைஇவர்கள்  மலம் அள்ளுவதுசாகடையை சுத்தம் செய்வது போன்ற காரியங்களை செய்துவந்தனர்இந்த  காரியங்களில் அவர்கள் ஈடுபட்டு வந்ததால் , அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இறந்தனர் . அவர்களை சுற்றி எப்பொழுதுமே ஒரு துர்நாற்றம் வீசியதால் தான் அவர்களை தீட்டு என்று பார்ப்பனர்கள்அழைத்ததாகவும் ஒரு கருத்தியலை படிக்க நேர்ந்தது.


 இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் திராவிடம் என்பது இந்தியாவின் நான்கு மாநிலங்களையும் அடக்கியது , திராவிடன் என்பது என்ற கூற்றை படித்தவுடன் கண்ணப்பனுக்கு சிரிப்பே வந்துவிட்டதுகாரணம் இவன் ஐஏஎஸ் தேர்வில் பங்கு பெறும் பொழுது நிறைய மக்களிடம் பேசும் வாய்ப்பைபெற்றிருந்தான் . அப்படிப் பேசும் சிலர் மலையாளிகளும் தெலுங்கர்களும் கன்னடர்களும் இருந்தனர் அவர்கள் யாவருமே தன்னை ஒரு மலையாளியாக தெலுங்கர் கன்னடர் ஆக வெளிக்காட்டிக் கொண்டனர்அவர்களிடம் திராவிடத்தை பற்றி கேட்க இவனுக்கு வெட்கமாக இருந்ததுதிராவிடத்தின் வரலாறை மேலும் ஆராய்ந்து பார்க்கையில் இவன்ஒரு விசித்திரமான சங்கதியை  கண்டுபிடித்தான் . அதாவது திராவிடம் என்பது நிலப்பரப்பை குறித்தாலும் மொழிவாரி மாநிலங்களாக 1950-களில் பிரிக்கப்பட்டபொழுது தமிழகத்தில் குடியேறிய தெலுங்கர்கள் எண்ணிக்கை 20 சதவீதத்தை தாண்டும்அந்த 20 சதவிகித ஓட்டை கவர்வதற்காகவும்தமிழனைத் தமிழன் அல்லாதோர் ஆளவும்  கொண்டுவரப்பட்ட ஒரு மாயையே திராவிடம் என்று இவனுக்கு இவனே முடிவு செய்து கொண்டான்.  


பெரியாரின் இயர் பெயர் இராம சாமி நாயக்கர் என்பதனையும் அறிந்தான்


நான்காம் விடை .


ஐஏஎஸ் ஆக தேர்வு பெற்று கோரக்பூரில் பதவி ஏற்றான்தமிழகத்தை விட கோரக்பூரில்இன்னும் மிக மோசமாக ஜாதிய பிரச்சனை இருந்தது  அங்கிருக்கும் மக்களில் 20 சதவீதத்தினர் பார்ப்பனராக இருக்கவே , அவர்களும் ஒரு ஆகப்பெரிய ஓட்டு வங்கியாக இருந்ததனால் அங்கு இருக்கும் அரசியல்வாதிகள் யாரும் இந்த சாதியை மேல்நிலை கீழ்நிலை பிரச்சனைகளைப் பற்றி பேசுவதே இல்லை . இன்று இருக்கும் ஆளும் வர்க்கத்தை பொருத்தவரை இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் திசை திருப்ப ஒரு 20% இஸ்லாமியர்கள் அங்கிருந்தனர்போதாத குறைக்கு பாபர் வேறு மசூதியைக் கட்டி அவர் பங்கிற்கு வரலாற்று பிரச்சனைகளை சேர்த்துவிட்டு சென்றிருந்தார்


ஆனாலும் இப்போது இவன் ஐஏஎஸ் ஆக இருப்பதனால் மக்கள் மரியாதையே செலுத்தினார்ஆனாலும் வடஇந்தியாவில் இன்னும் ஜாதி பெயர்களை ஒரு மனிதனின் பெயரோடு சேர்த்துக்கொள்ளும்வழக்கம் இருந்ததனால் தனது பெயரான கண்ணப்பனை , கண்ணப்ப வண்ணான் என்று மாற்றிக் கொண்டான்ஒரு வேலை கண்ணப்ப டோபி என்று மாற்றிக் கொண்டிருந்தாள் ஊர்மக்களுக்கு இவன் என்ன சாதி என்று கண்டுபிடிக்க தோன்றியிருக்கும்கண்டுபிடித்துவிட்டார்கள் என்றால் ஒருவேளை கொட்டாங்குச்சியில் டீ குடிக்கவும் நேர்ந்திருக்கும்கோரக்பூர் இன் அன்றாட பிரச்சனைகளில் பாதி மாடு சம்பந்தமாகவும் மீதி  சாதி சம்பந்தமாகவும் இருந்ததனால் ஒருகட்டத்தில் அந்த வேலையை வெறுத்து இவன் அம்பேத்காரைப் படித்த தயாரானான்


கடைசி விடை . 


அம்பேத்காரை படிக்க படிக்க அவனுக்கு மேலும் ஒரு உண்மை விளங்கியது தமிழகத்தில் நடக்கும் அத்தனை சாதிய சமத்துவத்திற்கு இவர்கள் பெரியார் என்று ஒருவரை தலைவராக நியமித்து அவர் தலைமையில் அத்தனை நன்மைகளும் நடந்ததாக எழுதி மக்களையும் நம்ப வைத்து இருந்தனர் . ஆனால் தமிழகத்தை தாண்டி வெளியே செல்லும்போது தான் , அம்பேத்கார் என்பவர் யார் அவர் செய்தது என்னென்னஅவர் இல்லையேல் இன்று  இவனால் ஒரு ஐஏஎஸ் ஆகி இருக்க முடியுமாஇல்லை இன்றும் வண்ணாரப்பேட்டையில் அழுக்கு ஜட்டியை துவைத்து இருப்பானா ? அவர் மட்டும் புத்தமதத்தை ஏற்காமல்  , ஒரு கிறிஸ்துவ மதத்தை கை காட்டி இருந்தால் என்ன ஆகி இருக்கும்அவர் இல்லையேல் இன்றைய நவீன இந்தியா இருந்திருக்குமா , என்பது போன்ற கேள்விகளும் எழுந்தன


நம் தமிழக வரலாற்றை ஒருமுறை கொஞ்சம் பின்னோக்கி படிக்க ஆரம்பித்ததில் அவனுக்கு அயோத்திதாச பண்டிதரும் அறிமுகமானார்அதேபோல் ஒரு பார்ப்பனிய எதிர்ப்பை பார்ப்பனர்கள் பலர் செய்து வெற்றிகரமாகவும் இருந்ததை பாரதியாரின் மூலமாகவும் அறிந்தான்மேலும் இந்திய வரலாற்றை புரட்டிப்பார்க்கையில் இவர்கள் அனைவருமே மெக்காலே எனும் ஒருவர் எழுதிய நூலை வைத்துபல விஷயங்களை பேசி வந்தனர்


முன் தோண்டிப் பார்த்தால் ஈஸ்ட் இந்தியா கம்பெனிவந்த  பொழுதுதான் இந்தப் பார்ப்பனர்களின் அதி தீவிர விளையாட்டுகள் ஆரம்பித்ததாக அப்போது எண்ணினான் . ஆனால் இன்னும் படிக்க படிக்க ஆயிரத்து 600 களின் தொடக்கத்திலிருந்தே பார்ப்பனர்கள் கை மேலே  இருப்பதை அறிந்தான் . வியப்பூட்டும்செய்தி என்னவென்றால்  1600 முன் என்ன நடந்தது ? தொல்லயிரங்களில் ராஜராஜசோழன ஏன் இப்படி ஒரு பிரம்மாண்டமான கோவிலை ஈசனுக்கு கட்ட வேண்டும்பார்ப்பனர்கள்தான் மேல்சாதி என்றால் அவர்களின் மன்னர்களான சத்திரியர்கள் இடம் கையேந்தி காசுக்காக  இருக்க வேண்டும் ?ஒருவேளை அவர்கள் அனைவருமே இராஜதந்திரியாக இருந்தாலுமே அவர்கள் என்றுமே ராஜாவிற்கு கீழ் தான் . ராஜாவைதொட்டால் தீட்டு என்று அவர்களால் கூற முடியுமா ? மண்டையை உடைத்துஇருக்க மாட்டார்கள்


இப்படிப் பல வேறு எண்ணங்கள் அவன் மனதில் ஒலித்துக் கொண்டிருந்த பொழுதுதான்அந்த எண்ணம் ஆன நாம் ஏன் நமது தந்தைக்கு இன்னும் தித் கொடுக்கவில்லை என்றஎண்ணம் வந்தது.  


கலெக்டராக இருப்பதினால் கங்கை கரையில் திதியை முடித்தான்அய்யர் கை கூப்பிவணங்கினார்காசு வாங்க மறுத்தார்


கார் ஏறும் முன் குப்பை அள்ளும் அந்த கருப்பு குழந்தைகளை பார்த்தான்இவனைவணங்கிய ஐய்யர் அவர்களை நாயை துறத்துவது போல துரத்தினார்


பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு வான் நட்சத்திரம் வெடித்தது ...  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.