திடீர் கவிதைகள்
அரை நாள் சோர்வை , ஒரே சிரிப்பில் தகர்த்துவிட்டாள்!
கடுங்கோபம் கொண்டு திரியும் என்னை ஒரே முத்தத்தை வைத்து காலி செய்கிறாள்!
பாவனைக்காக அழுவதாக நடித்தால் அவளும் பதறுகிறாள்!
விளையாடும் அரை மணிநேரமும் முடியவே கூடாது என்று கட்டளை போட்டு சிரிக்கிறாள்!
முடியாது என்ற வார்த்தையை அகராதியில் இருந்தே அகற்றுவாள் போல ..
இவள் ராணியாகவே பிறந்தாலா இல்லை நான் தான் இப்படி வளர்கிறேனா?
அவள் - மகள்
கருத்துகள் இல்லை