ஹோம் - சுகானுபவம்
He is not a nobody ,
He is somebody!
Wait …
He is a somebody who is a god for somebody !!
Home படத்தின் சாரம்சமாக நான் கருதுவது மேற்கூறிய வரிகளைதான் .
கண்களை குளமாக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டி படம் எடுக்காமல் எதார்த்த சினிமாவின் பயிற்சி பட்டறையாக இந்த படம் இருக்கிறது .
ஓட்டு மொத்த படமும் இந்திரன்ஸ் எனும் ஒரு அற்புத நடிகரிடம் ஆரம்பித்து முடிகிறது . காரணம் அவரது தோற்றமா ,அல்லது உடல் மொழியா , இல்லை சின்ன சின்ன உணர்ச்சிகளை அவர் வெளிக்காட்டும் விதமா, இல்லை அவரின் அப்பாவிதனமான பாவனைகளா என்றே கண்டுபிடிக்க முடியவில்லை ! கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லவே வேண்டாம் (அது கமல ஹாசருக்கு மட்டுமே சொந்தம் ) ! ஏனென்றால் அவர் நடித்திருக்கிறார் என்றே என்னால் நம்ப முடியவில்லை. மற்றவர்கள் பார்தார்களோ இல்லையோ , எனக்கு என் தந்தையை படமெங்கும் நியாபக படுத்திக்கொண்டே இருந்தார் !
மலையாள சினிமா என்றும் உணர்ச்சி வெள்ளத்தை கட்டவிழ்த்து விடுவதில் முன்னோடியாகவே இருக்கிறது !
வாழ்க்கை ஒரு வட்டம் , இங்கே அற்புதத்தை நிகழ்த்தியவர் பலர் நம் அருகிலேயே , ஏன் நம் வீட்டிலேயே இருக்கிறார்கள் என்று சொல்லும் இந்த கதையில் , எந்த ஒரு குறையும் கூற முடியாது!
அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். ஒரு ஃபீல் குட் அனுபவத்தை அருவி போல தரும் இந்த படத்தை போல தமிழிலும் சில அற்புதமான படங்கள் வந்திருக்கின்றன , உதாரணமாக "தவமாய் தவமருந்து" - என்ன சேரன் அவரது வேலையை - அதாவது அதீத நடிப்பை தந்திருப்பார்! அப்படி எதும் இல்லாமலேயே ஹோம் படம் நிறைவை தருகிறது . கிளைமாக்ஸ் ஒரு உணர்ச்சி பிரவாகம் என்று சொன்னால் மிகையாகாது!
இந்திரனுக்கு அவரது அப்பாவுடன் இருக்கும் அந்த பிணைப்பு , மகன்களை பார்த்து வரும் அந்த பெருமிதம் , அப்பாவியாக கேட்கும் கேள்விகள், புது மொபைல் வாங்கி கற்றுக்கொள்ள அவர் படும் பாடு என அனைத்தும் ரசிக்கும் படி இருக்கிறது .
ஒரு மெளோடிராமடிக் படத்திற்கான இசையை கச்சிதமாக தந்துள்ளனர். இரண்டேமுக்கால் மணிநேரம் ஒடும் படமான இதில் , ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டாலும் , அதை கடந்து பார்க்க முடிகிறது . செல்போன் வந்ததில் இருந்து ஆரம்பித்த அத்தனை பிரச்சினைகளையும் பிரச்சாரமாக சொல்லாமல் ரசிக்கும் படி வைத்திருக்கிறார்கள் .
அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் ! இல்லை பாடம்!
கருத்துகள் இல்லை